hari-hara-veera-mallu movie review
17 ஆம் நூற்றாண்டில் கதை நடக்கிறது. நாயகன் பவன் கல்யாண் ஊரில் சின்ன சின்ன திருட்டு செய்து இல்லாதவர்களுக்கு உதவி வருகிறார். ஒரு பக்கம் முகலாயர்கள் இந்துக்கள் வாழும் பகுதிகளை அழித்து நாட்டை தன்வசமாக்கி வருகிறார்கள். அப்படி இந்துக்களை அடிமையாக்கி பல மாகாணங்களை தன்வசமாக்கி வைத்து இருக்கிறார் பாபி தியோல். மேலும் இவர் கோஹினூர் வைரத்தை வைத்து இருப்பதால், அதை திருடி கொடுக்க பவன் கல்யாணுக்கு அழைப்பு வருகிறது. இதை ஏற்றுக் கொள்ளும் பவன் கல்யாண், பாபி தியோலை தேடி செல்கிறார். இறுதியில் பவன் கல்யாண் கோஹினூர் வைரத்தை கண்டு பிடித்தாரா? பாபி தியோல் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்துக்களை பவன் கல்யாண் மீட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் பவன் கல்யாண், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அடிமை மக்களுக்காக போராடுவது, எதையும் துணிந்து செய்வது, காதலிப்பது என நடிப்பில் பளிச்சிடுகிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி வருகிறார். நாயகியாக நடித்திருக்கும் நிதி அகர்வால் அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் பாபி தியோல். மிடுக்கான தோற்றத்தால் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். இவரது உடல் மொழி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. சத்யராஜ், ஈஸ்வரிராவ் உள்ளிட்ட பலர் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.
17 ஆம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருந்தது என்பதை வரலாற்று பின்னணியில் சொல்லி இருக்கிறார்கள் இயக்குனர் கிரிஷ் ஜாகர்லாமுடி, ஜோதி கிருஷ்ணா. பவன் கல்யாண் ரசிகர்களுக்காக பல கமர்சியல் அம்சங்கள் வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். பல இடங்களில் ரசிகர்களை கவர்ந்து இருந்தாலும் ஒரு சில இடங்களில் எதார்த்த மீறலாக அமைந்துள்ளது. தலை குனிந்து இருக்கும் மக்களை நிமிர வைப்பது, ஆடு புலி ஆட்டத்தில் நடக்கும் சண்டைக் காட்சி, கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. பல காட்சிகளில் பவன் கல்யாணுக்கு காலில் றெக்கை கட்டியது போல் பறக்கிறார். இதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.
ஞான சேகர் மற்றும் மனோஜ் பரமம்சா ஆகியோரின் ஒளிப்பதிவு சிறப்பு.
கீரவாணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் மாஸ் காண்பித்து இருக்கிறார்.
Mega Surya Production நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இடுப்பைக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா…
நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
கருப்பு நிற உடையில் மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும்,அ.அன்பு ராஜா,…
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர்…