Tamilstar
News Tamil News

தயவு செஞ்சு யாரும் இப்புடி செய்யாதீங்க! அதிர்ச்சியான ஹரிஷ் கல்யான் வெளியிட்ட போட்டோ

harish kalyan About Fans

ஹேண்ட்சம் ஹீரோவாகவும். லவ்வர் பாயாகவும் பல ரசிகைகளை கவர்ந்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். சிந்து சமவெளி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் போட்டியாளராக களத்தில் இறங்கி வந்தவுடனே மக்களின் பெரும் அன்பை பெற்றார்.

கொரோனாவுக்கு முன் அவர் நடித்திருந்த தாராள பிரபு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. காமெடி கலந்து ஹிட் ஸ்டோரியாக இப்படம் அமைந்தது.

அவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் தன் கையில் ஹரிஷ் கல்யாண் என பச்சை குத்தியுள்ளதை புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.

இதை கண்ட ஹரிஷ் “வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. தயவு செய்து யாரும் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.