நடிகர் ஹரிஷ் கல்யாணின் வளர்ச்சியை கண்டு பெருமிதம் அடையத்தான் வேண்டும். சிந்து சம்வெளி படம் மூலம் நடிகராக அறிமுகனார். பிக்பாஸ் நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்துள்ளார் என்றே சொல்லவேண்டும்.
அப்பா கல்யாண் சினிமாவில் தயாரிப்பாளர் என்ற போதும் தன் முயற்சியால் தனக்கான இடத்தை ரசிகர்கள், ரசிகைகளிடத்தில் பிடித்துக்கொண்டார். டாப் ஹீரோ இடத்திற்கு உயர்ந்துள்ளார்.
பியார் பிரேமா காதல் ஹிட்டாக தொடர்ந்து பல பட வாய்ப்புகள். கொரோனாவுக்கு முன் வெளியான அவரின் தாராள பிரபு படம் வெற்றியாக அமைந்ததே.
தெலுங்கில் வெற்றி பெற்ற பெல்லி சூபுளு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வரும் அவர் சிம்பு தேவன் இயக்கத்தில் ஆந்தாலஜி படமான கசடதபற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக இறுதி காலம் வரை பணியாற்றும் ஸ்ரீ மாதா புற்றுநோய் மருத்துவமனைக்கு கணிசமான தொகையை நிதியாக கொடுத்துள்ளாராம் ஹரிஷ் கல்யாண்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டு கை விடப்பட்டவர்களை அவர்கள் இறுதி நிமிடங்கள் வரை மிகுந்த அக்கறையுடன் பார்த்துக் கொள்ளும் ஸ்ரீமாதா புற்று நோய் மருத்துவமனை நிறுவனத்தின் விஜயஸ்ரீ அவர்களுக்கு பாராட்டுக்கள். அவரின் 8 ஆண்டுகால சேவைக்கு என் சிறிய பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. pic.twitter.com/dY5giKFrml
— Harish Kalyan (@iamharishkalyan) September 28, 2020