பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’, ‘தாராள பிரபு’, ‘எல்.ஜி.எம்’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பார்க்கிங்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண், முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
My humble contribution.
கை கோர்ப்போம் #Chennai 💪#ChennaiFloodRelief #chennaifloods @CMOTamilnadu pic.twitter.com/CiqBV4SCsm— Harish Kalyan (@iamharishkalyan) December 6, 2023