கருமிளகை நம் உணவில் சேர்க்கும்போது அது நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல்வேறு உணவுகளை நாம் பார்த்துள்ளோம்.அந்த வகையில் கரு மிளகு சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. என்று உங்களுக்கு தெரியுமா ?ஆம் வாங்க பார்க்கலாம்.
கரு மிளகு சாப்பிட்டு வரும்போது அது உடலின் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் உற்பத்தியில் அதிகரிப்பது மட்டுமில்லாமல் வயிறு மற்றும் செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவுகிறது.
மேலும் உடல் எடையை குறைக்க உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள கரு மிளகு உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
குறிப்பாக ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த கருமிளகை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.