ஏலக்காயில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
நம் உணவில் சேர்க்கப்படும் வாசனை பொருள்களில் ஒன்று ஏலக்காய். இதை உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. இதில் இருக்கும் ஊட்டச்சத்து உடல் எடையை குறைப்பது மட்டுமில்லாமல் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.
இது மட்டும் இல்லாமல் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதிலும் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
செரிமான பிரச்சனையிலிருந்து விடுபடவும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விலகவும் ஏலக்காய் உதவும்.
குறிப்பாக சளி, இருமல், தொண்டை வலி பிரச்சனை மற்றும் இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து வரும் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.
எனவே மருத்துவ குணங்கள் நிறைந்த ஏலக்காயை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.