வெள்ளரிக்காயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
நீரேற்றம் நிறைந்த காய்கறிகளில் ஒன்று வெள்ளரிக்காய். இது உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உடல் எடையை குறைக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இது மட்டும் இல்லாமல் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி வாய்வு பிரச்சனைக்கு தீர்வு அளிக்க உதவுகிறது. மேலும் இதில் ஆண்ட்டி ஆக்சிடென்ட் வைட்டமின் சி, கே நிறைந்துள்ளதால் உடலில் இருக்கும் தண்ணீர் பற்றாக்குறையை நீக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த வெள்ளரிக்காயை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.