Tamilstar
Health

கம்புவில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்.

Health Benefits of millet

கம்புவில் இருக்கும் நன்மைகள் குறித்து நாம் பார்க்கலாம்.

பொதுவாகவே சிறுதானிய உணவுகள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும். ஏனெனில் இரும்புச் சத்து நார்ச்சத்து கால்சியம் மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நம் உடலுக்கு தேவையான புரதச்சத்தை கொடுக்கிறது.

மேலும் கம்புவில் கூழ் புட்டு ரொட்டி தோசை போன்ற உணவுகளை சமைத்து சாப்பிடலாம். இது மட்டும் இல்லாமல் கம்பு உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக்க உதவுகிறது.

இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கும் தீர்வாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் கம்பு ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.

கம்பு மட்டும் இல்லாமல் கேழ்வரகு திணை வரகு அரிசி சோளம் குதிரைவாலி போன்ற சிறுதானிய உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.