அரச மரப்பட்டையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பொதுவாகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோய். இது வந்தாலே உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் அவசியமான ஒன்று. இது மட்டும் இல்லாமல் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பல வழிமுறைகள் இருந்தாலும் குறிப்பாக அரச மர பட்டை நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் உயர் ரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும் இது ஒரு மருந்தாக பயன்படுகிறது. அரச மரப்பட்டையை காய வைத்து பொடியாகவோ அல்லது ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிட்டு வரலாம்.
இருப்பினும் அரச மர பட்டைச் சாறு சாப்பிடும் போது சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்தால் மருத்துவரை அணுகுவது சிறந்தது.