முளைவிட்ட வெங்காயத்தில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பெரும்பாலும் நாம் சமைக்க பயன்படுத்தும் காய்கறிகளில் முக்கியமான ஒன்று வெங்காயம். இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். அதில் சில வெங்காயங்களில் முளை வருவதை நாம் பார்க்க முடியும். அப்படி முளைவிட்ட வெங்காயத்தை உணவில் சேர்க்கும்போது அது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமில்லாமல் உயரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
மேலும் முளைத்த வெங்காயத்தில் புரதம் அதிகமாக இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
இது மட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்கவும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது.
குறிப்பாக இதில் இருக்கும் வைட்டமின் சி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை பலப்படுத்த உதவுகிறது.
எனவே எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த முளை விட்ட வெங்காயத்தை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.