சுக்குவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
சுக்குவை உணவில் சேர்த்துக் கொண்டால் அது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.
சுக்கு மற்றும் அதிமதுரம் இரண்டையும் சேர்த்து தேனில் கலந்து சாப்பிட்டால் இருமல் மற்றும் சளி குணமாக உதவுகிறது.
மேலும் பூரான்,தேள்,கடி விஷத்தை முறிக்க சுக்கு, மிளகு 5,மற்றும் 1 வெத்தலை சேர்த்து மென்று சாப்பிட்ட வேண்டும்.
குறிப்பாக உடல் எடையை குறைக்க சுக்கை வெது வெதுப்பான நீரில் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும்,செரிமான பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.
தலைவலி பிரச்சனையில் அவதி படுபவர்களுக்கு சுக்கை பொடியாக்கி பெருங்காயத்தூள் சேர்த்து தலையில் தடவினால் தலைவலி நீங்கும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் பசியின்மையை தடுக்க சுக்கு மிகவும் பயன்படுகிறது. எனது சுக்கில் இருக்கும் ஆரோக்கியத்தை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.