தமிழ் சின்னத்திரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று இதயத்தை திருடாதே. இந்த சீரியல் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வந்தது. அதைக் காட்டிலும் இந்த சீரியலில் நாயகனாக நடித்த நவீன் குமார் மற்றும் நாயகியாக நடித்த ஹீமா பிந்து இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி ஆவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நவீன்குமார் செய்தி வாசிப்பாளர் கண்மணியை காதலித்து வருவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.
இந்த நிலையில் இதயத்தை திருடாதே சீரியலில் இருந்து ஹீமா பிந்து விலகிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இனி அவருடைய கதாபாத்திரத்தில் யார் சஹானாவாக நடிப்பார் என்ற கேள்வியில் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் யார் நடித்தாலும் பழையபடி இருக்காது எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
