தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் ஹேமா.
சீரியல் மற்றும் நிஜத்தில் கர்ப்பமாக இருந்த இவருக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பெண் குழந்தை பிறந்துள்ளது. நிஜத்தில் என்ன குழந்தை பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது.
இந்த நிலையில் இவர் பிரசவத்தின் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது. தற்போது இதற்கு வீடியோ ஒன்றின் மூலமாக மீனா விளக்கம் அளித்துள்ளார்.
பலரும் என்னுடன் இந்த சீரியலில் இருந்து விலகப் போகிறேனா என கேட்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை. உங்கள் அனைவருக்கும் சீக்கிரமே ஒரு பாசிட்டிவான விஷயம் வரும் என தெரிவித்துள்ளார்.
இதனால் இந்த சீரியலில் ஏதாவது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மீனாவின் கதாபாத்திரம் தொடர்ந்து அப்படியே இருக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது.