Tamilstar
Health

தைராய்டு பிரச்சனையில் இருந்து விலக உதவும் மூலிகை டீ.

Herbal tea that helps to get rid of thyroid problems

தைராய்டு பிரச்சனையிலிருந்து விலக என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய நோய்களில் ஒன்று தைராய்டு. தைராய்டு வர முக்கிய காரணம் ஹார்மோன் சரியாக வேலை செய்யாதது தான்.

தைராய்டு அதிகமாக சுரக்கப்படும் போது எடை குறைதல் மற்றும் கை நடுக்கம் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.

குறைவாக சுரந்தால் உடல் எடை மிகவும் அதிகரித்து இதயத்துடிப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டால் கருவுறுகளையும் அது தடுக்கிறது.

தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் உணவு கட்டுப்பாட்டுடன் இருப்பது வழக்கம் அப்படி உணவிலும் தைராய்டு கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். அப்படி ஒன்றுதான் மூலிகை டீ .அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் கொத்தமல்லி விதை கருவேப்பிலை மற்றும் ரோஜா இதழ்களை சேர்த்து ஏழு நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வரவேண்டும்.

தினமும் டீ, காபியை விட இதை குடித்து வந்தால் தைராய்டு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.