Tamilstar
Health

கல்லீரல் கொழுப்பை கரைக்க டிப்ஸ் இதோ..!

Here are tips to melt liver fat..!

கல்லீரல் கொழுப்பை கரைக்க நாம் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

கல்லீரலில் சேரும் கொழுப்பை கரைக்க நாம் சில உணவு முறைகளை பயன்படுத்தலாம். கல்லீரல் கொழுப்பு ஏற்பட முக்கிய காரணம் மோசமான உணவு பழக்க வழக்கம். இந்தப் பிரச்சனை வந்தால் அடிக்கடி வயிற்றில் வலி ஏற்படும்.

ஒரு நாளைக்கு இரண்டு ஸ்பூன் ஆப்பிள் வினிகரை சாப்பிடுவதன் மூலம் கல்லீரலில் இருக்கும் கொழுப்பை கரைப்பது மட்டுமில்லாமல் வயிற்று வலியையும் குறைக்கிறது.

ஆம்லா சாப்பிட்டால் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கொழுப்பை கரைக்க உதவுகிறது. மேலும் பப்பாளி விதைகளை அரைத்து அதை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் கல்லீரல் கொழுப்பு பிரச்சனைக்கு நல்ல பலன் கொடுக்கும்.

இது மட்டும் இல்லாமல் ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று கப் கிரீன் டீ குடித்தால் சிறந்தது. கல்லீரல் கொழுப்பை கரைக்க பாலில் மஞ்சள் சேர்த்து குடித்து வந்தால் சிறந்தது.