Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காதல் படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த நடிகர்.வைரலாகும் தகவல்

heroine-friend-to-heroine kadhal movie

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த பரத் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தில் நாயகியாக சந்தியா நடித்திருந்தார். இந்த படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கி இருந்தார்.

மேலும் இந்த படத்தில் சுகுமார் என்பவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் படப்பிடிப்பை தொடங்க இயக்குனர் ஆயத்த நிலையில் இருப்பதாகவும் சுகுமார் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனரிடம் படத்தில் நான் இருக்கேனா சார் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். ‌‌‌

மேலும் இந்த படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்திருந்த சரண்யா தான் நாயகி, கடைசி நிமிடத்தில் ஸ்கூல் யூனிபார்மில் இருந்த சந்தியாவை கூட்டி வந்து நிறுத்த அது இயக்குனருக்கு பிடித்து போக இறுதி கட்டத்தில் நாயகி மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

heroine-friend-to-heroine kadhal movie
heroine-friend-to-heroine kadhal movie