தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரைப்படங்கள் இறுதியாக வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து நடிகர் சிம்பு உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக இந்த படத்துக்கு எஸ்டிஆர் 48 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர் சிம்பு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், தீபிகா படுகோன் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் பரவியது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க போவது திஷா பதானி தான். அவரிடம் பேச்சு வார்த்தைகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் வெகு விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரியவந்துள்ளது.