இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் ‘ஹாய் நான்னா’. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. ஹாய் நான்னா போஸ்டர்இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஹாய் நான்னா’ திரைப்படத்தின் டீசர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. ‘ஹாய் நான்னா’ திரைப்படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
I trust you
You trust me …Will be magic ♥️#HiNanna Teaser on 15th 🙂 pic.twitter.com/nki2a0ib4O
— Nani (@NameisNani) October 12, 2023