தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட ஹிப்ஹாப் ஆதி, விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “நீங்க எப்பவுமே எனக்கு ஹீரோ தான்” என சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மீசைய முறுக்கு படத்தில், ஹிப்ஹாப் ஆதிக்கு தந்தையாக நடிகர் விவேக் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்பவுமே நீங்க எனக்கு Hero தான். R.I.P Legend ❤️😞 pic.twitter.com/19bU2hn9x0
— Hiphop Tamizha (@hiphoptamizha) April 17, 2021