Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

ஹிட் லிஸ்ட் திரை விமர்சனம்

படத்தின் நாயகனான விஜய் கனிஷ்கா சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் சமூதாயத்தில் மிகவும் நல்லவர் என்ற பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார். எந்த உயிரையும் கொல்லக் கூடாது, எந்த உயிருக்கும் ஆபத்து விலைவிக்க கூடாது என்று வள்ளலார் நெறிமுறைகளை பின்பற்றி சைவ உணவையே சாப்பிட்டு வருகிறார். இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டு இருப்பவனின் அம்மாவையும் தங்கையையும் ஒரு முகமூடி போட்ட மர்ம நபர் கடத்துகிறான்.தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் கதாநாயகனை இரண்டு கொலை செய்ய கூறுகிறான். எந்த உயிருக்கும் ஆபத்து விலைவிக்க கூடாது என்று கொள்கையுடன் இருக்கும் நாயகன் தன் குடும்பத்துக்காக கொலை செய்தானா? யார் அந்த முகமூடி அணிந்த மர்ம நபர்? ஏன் நாயகனை குறிவைத்து இதை செய்ய சொல்கிறான்? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் நாயகன் விஜய் கனிஷ்கா அப்பாவித்தனமான, பயந்த சுபாவமான, அம்மா தங்கையை காப்பாற்ற போராடும் ஒரு மகனாக நடிப்பில் மிரட்டியுள்ளார்.காவல்துறையினருக்கும், அந்த முகமூடி அணிந்த மர்மநபருக்கும் இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் தவிப்பை மிக அழகாக வௌிப்படுத்தியுள்ளார்.இடைவேளைக்கு முன் வரும் சண்டை காட்சியில் மிகவும் அற்புதமாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் விஜய் கனிஷ்கா. சரத்குமார் போலிஸ் அதிகாரியாக அவரது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அறிமுக இயக்குனரான சூர்யகதிர் காக்கள்ளார் மற்றும் கார்த்திகேயன் விறுவிறுப்பான கதைக்களத்தை தேர்வு செய்து மிக சிறப்பாக இயக்கியுள்ளனர். சில காட்சிகள் ஆங்காங்கே சலிப்பை தட்டினாலும். படத்தின் திரைக்கதை ஓட்டத்தில் அதுபெரும் பலவீனமாக தெரியவில்லை. பெரும் இயக்குனரின் மகன் கதாநாயகனாக நடிப்பதால் தேவை இல்லாமல் காதல் காட்சிகளும் , பாடல்களும் படத்தில் வைக்காத்தது படத்தின் பெரும் பலம்.

சி.சத்யாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.

ராம் சரணின் சிறப்பான ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். சண்டை காட்சிகளை மிக அழகாக கையாண்டுள்ளார்.

ஆர்.கே செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

Hit list movie review
Hit list movie review