Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுதா கொங்கரா மற்றும் KGF பட தயாரிப்பு நிறுவனம் இணையும் கூட்டணி..ஹீரோ யார் தெரியுமா?

Hombale Films Announcement on Upcoming Movie

தமிழ் சினிமாவின் இறுதிச்சுற்று படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் சூரரைப்போற்று உட்பட சில வெற்றிப் படங்களை கொடுத்து இருப்பவர் சுதா கொங்கரா. மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் அடுத்ததாக கேஜிஎப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான Hombale நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த படத்தில் ஹீரோவாக யார் நடிக்கப் போவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து. இந்த நிலையில் நாளை மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது ஹீரோ குறித்த அறிவிப்பா? அல்லது வேறு ஏதாவது புதிய படத்தின் அறிவிப்பா என்பதை நாளை காலை வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.