தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் 96. இந்த படத்தில் இளம் விஜய் சேதுபதியாக எம் எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்திருந்தார்.
அதை போல இளம் திரிஷாவாக ஜானு என்ற கதாபாத்திரத்தில் கௌரி கிஷன் நடித்திருந்தார். விஜய் சேதுபதி திரிஷா ஜோடி பல ஆதித்யா பாஸ்கர் கௌரி கிஷன் ஜோடியும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இருவரும் இணைந்து ஹாட்ஸ்பாட் என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில் கௌரி கிஷன் ஆதித்யா கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டது போல உள்ளது. திருமண கோணத்தில் வெளியான இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.