ஹிரித்திக் ரோஷனுக்கு பாலிவுட் சினிமா வட்டாரத்தையும் தாண்டி நிறைய ரசிகர்கள் பல இடங்களில் இருக்கிறார்கள்.
ஹிந்தி சினிமா பிரபலங்கள் படங்களில் மட்டுமல்லாது விளம்பரங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.
அதிலும் படத்திற்கான சம்பளம் ஒரு தொகை எனவும், பங்கு தொகை எனவும் எப்படியும் ரூ 100 கோடி மேலும் வருமானம் ஈட்டிவருகிறார்கள்.
தற்போது அப்பிரபலங்கள் பலரும் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்கள்.
சயீப் அலிகான், அபிஷேக் பச்சன், மாதவன், நவாசுதீன் சித்திக் ஆகிய நடிகர்களும் ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி போன்ற நடிகைகளும் இப்போது வெப் சீரிஸ் பக்கம் சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஹிரித்திக் ரோஷன் வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளதுடன் ரூ 80 கோடி சம்பளமும் கேட்டுள்ளாராம்.
சேக்டர் கேம்ஸ் தொடரில் சயீப் அலிகான் நடித்து பெற்ற சம்பளத்தை விட இது பன்மடங்கு அதிகம் என்கிறார்கள்.