நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் அஜித்துடன் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் இயக்குனர் எச்.வினோத் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: “கொரோனா ஊரடங்கு காரணமாக கதையில் நிறைய மாற்றங்களை செய்தோம். எனவே அஜித்துக்கும் ஹூமா குரேஷிக்கும் படத்தில் காதல் காட்சிகள் கிடையாது. அவர்கள் இருவரும் படத்தில் நண்பர்கள், அவ்வளவுதான்” என்று கூறியிருக்கிறார்.