Categories: Health

ஹைட்றொக்ஸிகுளோறோகுயீன் பற்றித் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறதா?

இலாபத்தை முன்வைத்து திரிக்கப்படும் தகவல்கள்

கோவிட்-19 நோய்க்குத் தீர்வாகும் என ஜனாதிபதி ட்றம்பினால் அறிவிக்கப்பட்டுப் பிரபலமான ‘மலேரியா மருந்து’ ஹைட்றொக்ஸிகுளோறோகுயீனைப் பரீட்சார்த்த மனிதப் பரிசோதனைகளிலிருந்து நீக்குவதாக கடந்த வாரம் உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது.

உலகம் முழுவதுமிருந்து பெறப்பட்ட தரவுகளை வைத்து இந்த முடிவுக்கு வந்ததாக, உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ அதிகாரி செளம்யா சுவாமிநாதன் அவர்கள் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இத் தரவுகள் பற்றிய விளக்கமான கட்டுரை ஒன்றை பிரபல மருத்துவ சஞ்சிகையான லான்செட் பிரசுரித்திருந்தது. இக்கட்டுரையே உலக சுகாதார நிறுவனம் மனிதப்பரிசோதனைகளை (clinical trials) நிறுத்துவதற்குக் காரணம் என்றும் தற்போது கூறப்படுகிறது.

ஆனால், இதன் பின்னால் அரசியல் / வணிக காரணங்கள் இருக்கமுடியுமா எந்பதற்கான சந்தேகங்கள் வலுக்கின்றன. லான்செட்டின் கட்டுரைக்ககுக் காரணமான தரவுகளில் பல தவறுகள் உண்டென்றும், அவற்றைத் தந்த நிறுவனத்தின் பின்னணி பற்றிப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் மருத்துவ ஆய்வுச் சமூகங்களிடையே பரந்தளவில் உரையாடல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.

சேர்ஜிஸ்ஃபியர் கூட்டுத்தாபனம் (Surgisphere Corporation)
இந் நிறுவனம் சேபன் தேசாய் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்காவில் இருக்கிறது. இதன் பணி மருத்துவத் துறையினருக்கு தரவுகள், புள்ளி விபரங்கள், பகுப்பாய்வுகள், கல்வி ஆகியவற்றை வழங்குவது. உலகம் முழுவதுமுள்ள மருத்துவ நிறுவனங்களிடமிருந்து தகவல்கள்களைத் திரட்டி ஆய்வுகள் செய்பவருக்கும், உலக சுகாதார நிறுவனம் போன்ற கொள்கை வகுப்பாளர்களுக்கும் வழங்குவது தான் இதன் தொழில் என அதன் இணையத்தளம் கூறுகிறது.

சேர்ஜிஸ்ஃபியர் நிறுவனத்தின் ஸ்தாபகரும், அதன் முதன்மை நிர்வாகியுமான தேசாய், மேலும் மூவருடன் சேர்ந்து ஹைட்றொக்ஸி குளோறோகுயீன் பாவனையால் வரக்கூடிய தீங்குகள் பற்றித் தயாரித்த அறிக்கையே தமது மே 22 பிரசுரித்தில் வெளியிடப்பட்டதாக லான்செட் தெரிவிக்கிறது.

ஹைட்றொக்ஸி குளோறோகுயீன் மருந்தைப் பாவிக்கும் கோவிட்-19 நோயாளிகள் வேறு பல பக்க விளைவுகளுக்குள்ளாகிறார்கள், சிலரில் மரணமடைந்துமுள்ளார்கள் எனப் பல்வேறு வதந்திகள் முன்னம் வந்திருந்தன. அதை நிரூபிக்கும் வகையில், இப் பிரசுரம் அமைந்திருந்தது மட்டுமல்லாது அதைக் காரணம் காட்டி உலக சுகாதார நிறுவனமும் இம் மருந்தின் பாவனையை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளது.

சந்தேகம்
லான்சட் தனது பிரசுரத்தில் கூறுவதன்படி, ஆறு கண்டங்களிலுள்ள, 671 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 96,032 நோயாளிகளின் தரவுகள் இவ்வாய்வறிக்கை தயாரிப்பதற்காகப் பாவிக்கப்பட்டிருந்தன எனப்படுகிறது. இத் தரவுகள் சேர்ஜிஸ்ஃபியர் நிறுவனத்தைத் தவிர வேறு எவரிடமும் கிடைக்காது.

லான்செட்டின் பிரசுரத்துக்குப் பின்னர், சமூக வலைத் தளங்களிலும், PubPeer போன்ற சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் இவ்வாய்வு பற்றிப் பலதரப்பட்ட உரையாடல்களும் இடம்பெற்று வருகின்றன. பெரும்பாலானவை இந்த ஆய்வு பற்றிய பல சந்தேகங்களை எழுப்புகின்றன.

சந்தேகம் 1: ஆறு கண்டங்களிலும் நோயாளிகளில், வேறுபடும் அளவுக்கு முந்நோய்கள் (underlying health conditions) இர்ந்தாலும், அவர்களில் அவதானிக்கப்பட்ட அறிகுறிகளில் வேறுபாடுகள் எதுவ்மில்லாமல் ஒன்றுக்கொன்று அச்சொட்டாக இருக்கின்றமை. (ஆபிரிக்க நோயாளியிலும், அவுஸ்திரேலிய நோயாளியிலும் ஒரே விளைவுகளை இம் மலேரியா மருந்து ஏற்படுத்தியிருந்தமை).

சந்தேகம் 2: ஆறு கண்டங்கள், 671 மருத்துவமனைகள், 96,032 நோயாளிகள் என்ற பாரிய மூலங்களிலிருந்து இவ்வளவு குறுகிய காலத்தில் சேஜிஸ்ஃபியர் நிறுவனத்தால் எப்படி இத் தகவல்களைச் சேகரித்து, ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க முடிந்தது?

சந்தேகம் 3: இதில் பாவிக்கப்பட்ட தரவுகள், மருத்துவத் துறையில் gold standard என வர்ணிக்கப்படும் நோயாளிகள் மீதான எழுந்தமான மருந்துப்பாவனை (randomized controlled study) மீது பெறப்பட்டவையல்ல (இதை செளம்யா சுவாமிநாதன் ஒப்புக்கொள்கிறார்) மாறாக, மருத்துவமனைப் பதிவேடுகளிலிருந்து பெறப்ப்ட்டவை. இவற்றில் சில தரவுப் பிழைகள் பின்னர் திருத்தப்பட்டன.

சந்தேகம் 4: ஆபிரிக்கக் கண்டத்தில் நோய்த் தொற்றாளரின் எண்ணிக்கை, ஏப்ரல் 14 வரை, 15,738 என இவ்வறிக்கை கூறுகிறது. ஆனால் ஆபிரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையத்தின் தரவுப்படி இது 4,402 மட்டுமே. அவுஸ்திரேலியாவில் கோவிட் -19 இனால் ஏற்பட்ட மரணஙள் 69 தாகவிருக்கும்போது, இவ்வறிக்கை அதி 73 எனக்கூறுகிறது.

சந்தேகம் 5: லான்செட்டில் இக்கட்டுரை வெளிவந்த பின்னர் சேர்ஜிஸ்ஃபியர் நிறுவனத்தின் பெறுமதி பங்குச் சந்தையில் உயர்ந்திருக்கிறது.

சந்தேகம் 6: சேர்ஜிஸ்ஃபிய்ஃர் இதேபோன்றதொரு கட்டுரையை New England Journal of Medicine என்ற சஞ்சிகையில் வெளிவந்த கடுரைக்கும் தரவுகளை வழங்கியிருந்தது. அதில், ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களிலுள்ல 169 மருத்துவமனைகளின் தரவுகளை ஆராய்ந்ததாகவும், அதன்படி ஹைட்றொக்ஸிகுளோறோகுயீன் பாவித்த கோவிட்-19 நோயாளிகளில் மரனம் சம்பவிப்பதற்கான சாத்தியம் அதிகமுண்டு எனவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

சந்தேகம் 7: ACE inhibitors, ARBs போன்ற இருதயவியாதிக்கான மருந்துகள் பாவிக்கும் கோவிட்-19 நோயாளிகளுக்கு ஆபத்துகள் சற்று அதிகம் என வேறு பல ஆய்வுகள் தெரிவித்திருந்தாலும், சேர்ஜிஸ்ஃபியர் ஆய்வு அவற்றைபற்றி எவ்வித கருத்துக்களையும் கூறவில்லை.

ஹய்ட்றொக்ஸி குளோறோகுயீன் ஒரு புதிய மருந்தல்ல.  அது 100 வருடங்களுக்கு மேலாக மலேரியாவுக்கு சிகிச்சையாகப் பாவிக்கப்பட்டுவரும் ஒரு மருந்து. அதை அருந்தும் நோயாளிகளில் திடீரென்று மரணங்கள் அதிகரிக்கின்றன என மருத்துவ மனைப் பதிவேடுகளின் தரவுகளைக் கொண்டு, ஒரு இலாப நோக்குள்ள தனியார் நிறுவனம் உலக சுகாதார நிறுவனத்தின் கொள்கைகளைத் தீர்மானிப்பது பற்றி பல விஞ்ஞானிகளும், மருத்துவ சமூகமும் அக்கறை கொண்டுள்ளது தெரிகிறது.

ஹைட்றொக்ஸி குளோறோகுயீன் தயாரிப்பிற்கான உரிமம் (patent) காலாவதியாகிவிட்டபடியால் அதை இந்தியா போந்ற நாடுகளில் மிகக்குறைந்த செலவில் தயாரிக்க முடியும் (generic). Remdesivir போன்ற மருந்துகளைத் தயாரிக்கும் பெரிய மருந்து நிறுவனங்களுக்கு (Gileads) கிடைக்கவிருக்கும் இலாபத்தில் ஏழை பங்காளனாகிய ஹைட்றொக்ஸி குளோறோகுயீன் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டுவிடுமோ?

பிரான்ஸ் நாட்டில், கோவிட்-19 இன் ஆரம்பநாட்களில் ஹைட்றொக்ஸி குளோறோகுயீன் மருந்தின் புகழ் பாடியது பற்றியோ, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் ரகசியமாக அதைப் பாவிப்பது பற்றியோ பரபரப்பான செய்திகள் வராவிடினும், ஜனாதிபதி ட்றம்ப் ‘நான் ஹைட்றொக்ஸி குளோறோகுயீன் மருந்தை உட்கொள்கிறேன்’ எனப் பகிரங்கமாகப் பிரகடனம் செய்து மூன்று வாரங்களின் பின்னரும் உயிரோடு இருப்பது என்பது something to think about.

admin

Recent Posts

தக்காளி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!!

தக்காளி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…

7 hours ago

வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயங்களை பகிர்ந்த ஏ ஆர் ரகுமான்..!

ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்போது இந்திய சினிமாவில் மட்டுமில்லாமல் உலகளவில் இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து வருகிறார்…

14 hours ago

விக்ரம் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் விக்ரம் தற்போது விக்ரம் 63 மற்றும் 64 ஆகிய படங்களில்…

14 hours ago

தெலுங்கு படங்கள் ஆயிரம் கோடி வசூல் செய்வதற்கான காரணத்தை கூறிய சிவகார்த்திகேயன்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

15 hours ago

மன்னிப்பு கேட்க சொன்ன சூர்யா, மாதவியின் முடிவு என்ன? மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

15 hours ago

சீதாவை சமாதானப்படுத்திய அருண், பயத்தில் கிருஷ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து,அருண்…

18 hours ago