Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட்டு தடை

I Court bans illegal posting of master movie on websites

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற ஜனவரி 13-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

400 இணையதளங்களிலும், 9 கேபிள் டிவிகளிலும் சட்டவிரோதமாக வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. 9 மாதம் கடந்து வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படம் இணையத்தில் வெளியானால் பெரும் நஷ்டம் ஏற்படும் என தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.