பேட்ட படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்து, அதன்பின் விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
இப்படத்தை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து மாறன் எனும் படத்தில் நடித்திருந்தார். நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த இப்படம் மாபெரும் தோல்வியை தழுவியது.
மேலும், தற்போது பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வரும் மாளவிகா மோகனன், முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் சல்மான் கானுடன் மாளவிகா மோகனன் ஜோடியாக நடிக்கிறார் என்பது போல் தகவல் சமூக வலைத்தளத்தில் உலா வந்தது.
பார்த்த நடிகை மாளவிகா, இது முற்றிலும் பொய்யான தகவல், நான் சல்மான் கானுடன் நடிக்கவில்லை என்று உறுதி செய்துள்ளார்.
False article. Not true 🙂 Putting it out here as a lot of people have been asking me if I’m doing this. pic.twitter.com/Dvj2gRw3n6
— malavika mohanan (@MalavikaM_) May 26, 2022