சூது கவ்வும் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து, மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து காதலும் கடந்து போகும் என்ற படத்தை இயக்கினார்.
இப்படமும் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் குறித்து நலன் குமாரசாமி கூறும்போது, ‘குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி திரைப்படம் உருவாக காரணம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சார்தான்.
இந்த படத்தில் 4 காதல் கதைகள். நான்குமே வித்தியாசமாக இருக்கும். நான் இந்த படத்திற்காக ஒரு நடிகையை பற்றி பேச விஜய் சேதுபதியிடம் சென்றேன். அப்போது, என்ன கதை என்கிட்ட சொல்லு என்றார். நானும் சொன்னேன். கதை கேட்டுவிட்டு நானே நடிக்கிறேன் என்றார்.
நானும் விஜய் சேதுபதி இல்லாமல் படத்தை இயக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை என்று சிரித்துக் கொண்டே சொன்னார் இயக்குனர் நலன் குமாரசாமி.