ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதையடுத்து டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்தார். இவருக்கு தமிழ் படங்கள் சரிவர அமையாவிட்டாலும், தெலுங்கில் பிளாக்பஸ்டர் நடிகையாக வலம் வருகிறார். காரணம் அங்கு இவர் நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றன. இதனால் தெலுங்கு படங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகை நிவேதா பெத்துராஜ், அடுத்ததாக, ரெட் என்ற தெலுங்கு படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இது தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற தடம் படத்தின் ரீமேக்காகும். இப்படம் வருகிற பொங்கலன்று ரிலீசாக உள்ளது. அதற்கான புரமோஷன் பணிகளில் நிவேதா பெத்துராஜ் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் நிவேதா பெத்துராஜ் கூறியதாவது: தெலுங்கில் எனக்கு நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கின்றன. அது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக பார்க்கிறேன். அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசை. கதைக்கு தேவைப்பட்டால் கிளாமராகவும் நடிக்க தயார்.
பொம்பள விஜய் சேதுபதியாக இருக்க ஆசைப்படுகிறேன். அவர் எந்தவிதமான கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறார். அதேபோல் நானும் இருக்க ஆசைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார்.