கீர்த்தி சுரேஷ் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் 2013ம் ஆண்டு கீதாஞ்சலி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விக்ரம் பிரபுவுடன் நடித்த ‘இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழில் நடிக்க தொடங்கினார். சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் மூலம் ரசிகர்களிடையே புகழ் பெற்றார்.
பின்னர் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், 2019ம் ஆண்டு வெளிவந்த மகாநதி படத்தின் சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெற்றார்.
கவர்ச்சி அல்லாமல் குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில் மகேஷ் பாபு படத்தில் நீச்சல் உடையில் நடிப்பதாக தகவல் வெளியானது. இதனை மறுத்த கீர்த்தி சுரேஷ், இதுபோன்ற காட்சிகளில் நான் எப்போதும் நடிக்கமாட்டேன். இந்த செய்தியை யாரும் நம்பவேண்டாம் என்று கோபமாக தெரிவித்துள்ளார்.