Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘துணிவு’ படத்தை முதலில் பார்ப்பேன்.. பிரபல நடிகை பளிச் பதில்..

I will watch the movie 'Thunivu' first - aparnathi

சின்னத்திரையில் ஆர்யா கலந்துக் கொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கவனம் பெற்றவர் நடிகை அபர்ணதி. இதைத்தொடர்ந்து ‘தேன்’, ‘ஜெயில்’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது இயக்குனர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் ‘உடன்பால்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையடுத்து ‘உடன்பால்’ திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை அபர்ணதி, தனக்கு அதிக ஸ்கிரீன் ஸ்பேஸ் கதைகளில் நடிக்க ஆசை அதற்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதாக கூறினார்./

மேலும், ஆர்யாவுடன் நடிக்க ஆசைப்படுகிறீர்களா என்ற கேள்விக்கு, எனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லை என்றார். பின்னர் பொங்கலுக்கு வெளியாகவுள்ள ‘வாரிசு’, ‘துணிவு’ திரைப்படத்தில் முதலில் ‘துணிவு’ திரைப்படத்தை பார்ப்பேன் என்றும் எனக்கு அஜித் மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார்.