தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று இதயம். திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஹீரோவாக ரிச்சர்ட் என்பவர் நடிக்க ஹீரோயினாக ஜனனி அசோக்குமார் நடித்து வருகிறார்.
ஆரம்பத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த சீரியல். ஒவ்வொரு நடிகர் நடிகைகளின் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் ஆதி பாரதியின் திருமணத்திற்கு பிறகு அதீத ரொமான்டிக் சீரியலாக மாறிவிட்டது.
இந்த நிலையில் தற்போது ஹனிமூன் கொண்டாட ஆதி பாரதி ஏற்காட்டுக்கு சென்றுள்ள நிலையில் அங்கே ஓவர் ரொமான்டிக்காக இருப்பது காட்சிகள் இடம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் இரு மனம் இணையும் ஒரு உன்னத தருணம் என ரொமான்டிக் ப்ரோமோ வீடியோ ஒன்றை ஜீ தமிழ் வெளியிட்டுள்ளது.
இதைப் பார்த்து ரசிகர்கள் பலர் செம ஜோடி என கூறி வந்தாலும் அதற்கு இணையாக சீரியலில் இவ்வளவு ரொமாண்டிக் காட்சிகள் தேவையா? பேமிலியுடன் பார்ப்பவர்கள் எப்படி பார்ப்பாங்க என விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
இது பற்றி உங்க கருத்து என்ன? கமெண்ட்டில் சொல்லுங்க.