Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“வட இந்தியாவில் சல்மான் கான் என்றால், தென்னிந்தியாவில் இவர் தான்” விஜய்யா, அஜித்தா?

If Salman Khan is in North India, he is in South India Vijay, Ajith

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவரின் திரைப்படங்களுக்கு இந்தியளவில் வரவேற்பு அதிகமாக உள்ளது.

அந்த வகையில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார், இப்படமும் விரைவில் திரைக்கு வரும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் திரையுலகின் தயாரிப்பாளரும் பிரபல நடிகருமான VTV கணேஷ் தளபதி விஜய் குறித்து ஒரு பேட்டியில் புகழ்ந்து கூறியுள்ளார்.

ஆம் அதில் “வட இந்தியாவில் எப்படி சல்மான் கான் பிரபலமாக உள்ளாரோ, அந்த அளவிற்கு தென்னிந்தியா அளவில் விஜய் இருக்கிறார்” என அவர் கூறியுள்ளார்.