கல்லீரல் பாதிக்கப்படுவது சில அறிகுறிகளை வைத்தே நாம் கண்டுபிடிக்கலாம்.
மனிதனின் உடலில் இருக்கும் உறுப்புகளில் முக்கிய பங்கு வகிப்பது கல்லீரல். இது செரிமானத்தின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு உடலுக்கு தேவையான ஆற்றலையும் சக்தியையும் அதிகரிக்கும். அளவுக்கு மீறி மது அருந்துவது புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்கள் இருந்தால் கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும். அதனை நாம் சில அறிகுறிகள் வைத்தே கண்டுபிடிக்கலாம்.
கல்லீரலில் குறைபாடு தென்பட்டால் அதற்கு முக்கிய காரணம் மஞ்சள் காமாலை.
கண்கள் மஞ்சளாகவும் சிறுநீர் மஞ்சள் நிறமாகவும் இருந்தால் அது கல்லீரலில் உள்ள செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவதற்கான அறிகுறி ஆகும். மேலும் உடல் முழுவதும் அரிப்பு மற்றும் சோர்வாக காணப்படும்.
மேலும் கல்லீரல் பிரச்சனை இருப்பவர்களுக்கு பாதத்தில் அடிக்கடி வீக்கம் ஏற்படும் அப்படி ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது சிறந்தது.
கல்லீரல் குறைபாடு இருந்தால் அதிலிருந்து வெளியேறும் திரவங்கள் அடி வயிற்றில் தங்கி அடிவயிறு வீங்கியது போன்று இருக்கும். அளவுக்கு அதிகமாக குடிப்பதே இதற்கு முக்கிய காரணம்.
இது மட்டும் இல்லாமல் ரத்தத்தில் ஹார்மோன் அளவு மாறுபடுவதால் உள்ளங்கையில் எரிச்சல் மற்றும் அரிப்பு அதிகமாக இருக்கும். இது பெரும்பாலும் அதிகமாக மது அருந்துபவர்கள் மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு வரக்கூடும்.