Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அயோத்தி கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள போகும் இளையராஜா. வைரலாகும் தகவல்

ilaiyaraja-going-to-ayothi temple

“உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22-ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோவில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் அறிவுரைப்படி, கும்பாபிஷேக விழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, அயோத்தி – ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, கும்பாபிஷேக நிகழ்வுக்கு கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வரும் 21-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அயோத்திக்கு புறப்பட்டு செல்கிறார். அவருடன் மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணாவும் பங்கேற்கின்றனர்.இதே போல இசைஞானி இளையராஜாவும் அயோத்தி செல்கிறார். அயோத்தி செல்லும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் ஒருநாள் முன்பாகவே அதாவது 21-ம் தேதியே அயோத்திக்கு வந்து விடும்படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.”,

ilaiyaraja-going-to-ayothi temple
ilaiyaraja-going-to-ayothi temple