Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூப்பர்மேன், பேட்மேன் படங்களை பற்றி பேசிய இளையராஜா

ilayaraja about superman and batman

இசைக்கு எல்லை என்பதே இல்லை என்று சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 1400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இளையாராஜா அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் சூப்பர்மேன், பேட்மேன் படங்களின் பாகங்களை உதாரணம் காட்டி அவர் உருவாக்கி வரும் “ஹவ் டூ நேம் இட்” என்ற இசை சீரிஸின் இரண்டாம் பாகத்தை பற்றி பேசி பதிவிட்டுள்ளார். இந்த இசை சீரிஸ் விரைவில் வெளிவரும் என பதிவிட்டு ஒரு வீடியோ பதிவின் வாயிலாக அந்த இசை சீரிஸ் பாகம் 2 பற்றி அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு அனைவரின் இசை ஆர்வத்தை இழுத்து இசை சீரியஸை எதிர்ப்பார்க்க வைத்துள்ளது.