இசைஞானி இளையராஜா இசையமைத்த “மதுரை மணிக்குறவன்” படத்தின் பாடல்களை அவரது புது ஸ்டூடியோவான இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் வெளியிட்டார்.
காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் ஜி.காளையப்பன் தயாரிக்க ராஜரிஷி.கே இயக்கியுள்ளார். தூத்துக்குடி, மதுர சம்பவம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஹரிக்குமார் கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். படத்தில் இடம் பெற்றுள்ள 6 பாடல்களையும் கவிஞர் முத்துலிங்கம் எழுதியுள்ளார்.
மனசில பெரியவன் தான் மதுரக்காரன்… என்ற பாடலை இளையராஜாவே பாடியுள்ளார். படத்தின் அனைத்து பாடல்களும் ஒரே நாளில் இசைக்கோர்ப்பை முடித்துள்ளார். மதுரை மணிக்குறவன் படத்தின் பின்னணி இசை முதல் படமாக இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது.
மதுரையில் நடந்த உண்மை சம்பவமும் பல கொலைக் குற்றங்களில் நிகழும் பின்னணி பற்றியும் உருவாக்கப்பட்ட கதையில் ஜி.காளையப்பன், சுமன், ராதாரவி பருத்தி வீரன் சரவணன், எம்.எஸ்.பாஸ்கர், கௌசல்யா, பருத்தி வீரன் சுஜாதா, கஞ்சா கருப்பு, அஸ்மிதா, ராஜ்கபூர், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.