இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
சவுத் ஆப்பிரிக்காவை தொடர்ந்து தற்போது சென்னையில் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இசையமைப்பாளர் அனிருத் மியூசிக் கம்போஸ் செய்ய அதனை இயக்குனர் ஷங்கர் ரசித்து என்ஜாய் செய்து வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ,
#Indian2 – An #Anirudh Sambhavam for a #KamalHaasan – #Shankar film 🔥
Going to be a CHARTBUSTER ❤️🔥pic.twitter.com/g5u7lGRrqL— VCD (@VCDtweets) May 22, 2023