தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் இந்தியன்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் பல வருட இடைவெளிக்கு பிறகு தற்போது உருவாகி வருகிறது. படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த் உட்பட எக்கச்சக்கமான பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சுதந்திர தின விழா என்பதால் இந்தியன் 2 பட குழு புதிய போஸ்டரை வெளியிட்டு அனைவருக்கும் சுதந்திர தின விழா நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.
இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
#INDIAN2 pic.twitter.com/rhStm6ISLD
— Shankar Shanmugham (@shankarshanmugh) August 15, 2023