தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, விவேக் மற்றும் பலர் இணைந்து நடித்த வெளியான திரைப்படம் இந்தியன் 2.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு பல ஆண்டுகளாக உருவான இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 60 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.