இந்திய திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.
அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கமலுடன் இணைந்து நடிகை காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி சங்கர், சித்தார்த், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பல்வேறு இடங்களில் தீவிரமாக நடைபெற்று வந்ததை தொடர்ந்து தற்போது படத்தின் புதிய அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி, இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்தின் இறுதியில் நிறைவடைய இருப்பதாகவும் இப்படத்தை வரும் பொங்கல் 2024 பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
#Indian2 shooting to be wrapped up by this Month end 🎬✅
Movie Planning for Pongal 2024 release 🤝
One of the benchmark movie from Kollywood loading ⌛🔥#KamalHaasan | #Shankar | #Anirudh pic.twitter.com/rCeoPNnuJQ— AmuthaBharathi (@CinemaWithAB) June 19, 2023