தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் இருப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமைகளுடன் வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மட்டுமின்றி மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாகவும் இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் ராம்சரண் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
