Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வைரல்

indian2-movie-update viral

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் ‘இந்தியன் -2’. இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினம் பகுதியில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள நானூறு ஆண்டு பழமையான டச்சுக்கோட்டை வளாகத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெறுகிறது.

முதல்நாள் படப்பிடிப்பான நேற்று சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளையர்களுடன் சண்டை போடுவது போன்ற காட்சியில் நடிப்பதற்காக கமல்ஹாசன் வந்திருந்தார். தகவலரிந்து அப்பகுதி மக்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் கோட்டை முன் கமல்ஹாசனை பார்க்க குவிந்தனர். ரசிகர்களை பார்த்து கையசைத்த கமல்ஹாசன் கோட்டை வாசல் பகுதியில் காவலுக்கு இருந்த போலீசாரும், தனியார் பவுண்சர்களும் யாரையும் ஷூட்டிங் பார்க்க அனுமதிக்கவில்லை.

பொதுமக்கள் கூடியிருப்பதை அறிந்த கமல்ஹாசன் வளாகத்திற்கு வந்து அங்கிருந்த மேஜை மீது நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்து கும்பிட்டார். பின்னர் ரசிகர்களும், பொதுமக்களும் அங்கிருந்து சென்றனர். இதையடுத்து நேற்று இரவு 10 மணிக்கு துவங்கிய படப்பிடிப்பு இன்று காலை 5 மணி வரை நடந்தது. இதேபோல் இன்றும், நாளையும் சதுரங்கபட்டினம் டச்சுக்கோட்டையில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. பின்னர் பனையூர் பகுதியில் இது போன்ற செட் போடப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க இருப்பதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர்.

indian2-movie-update viral
indian2-movie-update viral