Tamilstar
Health

மீன் அதிகம் சாப்பிடுவீர்களா.. அப்போ கண்டிப்பா இதை மிஸ் பண்ணாம பாருங்க..

information for eat a lot of fish

பெரும்பாலும் அசைவ உணவுகளை உண்பவர்கள் அதிகம். அதிலும் குறிப்பாக மீன் வாங்கி அதை மசாலாவில் ஊற வைத்து எண்ணெயில் பொரித்து வறுத்து சாப்பிட்டால் அப்படி இருக்கும். இருப்பினும் ஒரு சில மீன்கள் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மீன்கள் ஆகவே இருக்கும்.

அப்படிப்பட்ட மீன் தான் பூ விரால் . இந்த மீன் இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மீனை மார்க்கெட்டில் விற்பனை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். சில ஊர்களில் இந்த மீனை மொய் மீன் என்றும் கூறுவார்கள்.

இந்த மீனை சாப்பிடும்போது ஆண்மை குறைபாடு மற்றும் புற்றுநோயை உண்டாக்குகிறது. இந்த மீனை பல்வேறு மாவட்டங்களில் மீன் பண்ணைகள் அமைத்து விற்பனை செய்து வருகின்றன. இருப்பினும் பொது நல வழக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது. தடையை மீறியும் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு தான் வருகிறது.

இந்த மீன் வளர்ப்பதன் மூலம் உள்நாட்டு மீன்களான உளுவை, ஆரால், போன்ற மீன் உற்பத்தி அழிந்து வருகிறது.

இந்த மீனை சாப்பிடுவதன் மூலம் பலவிதமான தோல் நோய்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இப்படிப்பட்ட மீன்கள் சாப்பிடுவதை தவிர்த்து உடல் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்வது சிறந்தது.