Tamilstar
Health

இணையத்திற்கு அடிமையாவதால் மன இறுக்கம் ஏற்படுமா?

இணையத்தைப் பயன்படுத்துவதால் மன இறுக்கமா? அது எப்படி சாத்தியம்? என்று நம்மில் பலர் கேட்கலாம்.

துரதிர்ஷ்டவசமாக, இணையம் உண்மையில் மன இறுக்கத்திற்கான காரணங்களில் ஒன்று என்றும், குறிப்பாக பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களுக்கு இந்தப் பிரச்சனை இருப்பதாகவும் பல ஆய்வுகள் ஆதாரங்களை வழங்கியுள்ளன.

சுவாசிக்காமல் உயிர்வாழ முடியாது என்பதைப் போல, இணையம் இல்லாமலும் உயிர்வாழ முடியாது என்ற நிலை வந்துவிட்டது! எழுதப் படிக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் இணையத்தில் நுழைந்து, தங்கள் கற்பனைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாகவும், கற்பனை உலகத்தில் தங்களை இழப்பதற்கு ஒரு வாய்ப்பாகவும், தங்களின் பிரச்சனைகள் மற்றும் பலவற்றிலிருந்து தப்பிப்பதற்காகவும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

பிறருடன் பேசுவதும் பழகுவதும் நேரில் நடப்பதைவிட ஆன்லைனிலேயே இப்போது அதிகமாக நடக்கிறது. ஆன்லைனில் திருமணம் செய்து கொண்டால்கூட ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை!

இணையம் எப்படி மன இறுக்கத்தை உண்டாக்குகிறது என நீங்கள் கேள்வி கேட்கலாம். உண்மையில் இணையம் பலருக்கு மகிழ்ச்சியின் ஆதாரமாக இருக்கிறது. இணையத்திற்கும் மன இறுக்கத்திற்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொள்ள, மன இறுக்கம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்வோம்.

மன இறுக்கம் என்றால் என்ன? (What is depression?)
வழக்கமாக, நாம் எல்லோரும் சோகமாகவும், ஏமாற்றமாகவும், பயனில்லாதவர்களாகவும், ஆதரவற்றவர்களாகவும், ஒரு கட்டத்தில் உணர்கிறோம். எவ்வாறாயினும், இத்தகைய உணர்வுகளின் தீவிரம் நமது தினசரி வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு அதிகரிக்கும் போது, ​​இது மன இறுக்கம் என வகைப்படுத்தப்படுகிறது.

மிகவும் நல்ல விஷயம் எப்படி கெட்டதாக இருக்க முடியும்? (How can something so good be so bad?)
நெருப்பு, சக்கரத்திற்குப் பிறகு மனித குலத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வரம் இணையம், இதுவே நமது மிகப் பெரிய சாபமும் ஆகும். நம் மூதாதையர்கள் அனுபவித்த வாழ்க்கையை விட, இணையம் நமது வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் நம் மூதாதையர்கள் சந்திக்காத சிரமங்களையும் இது ஏற்படுத்தியுள்ளது. அனைத்து எல்லைகளையும் கடக்கவும், நம் வாழ்வை அனைவரும் பார்க்கும்படி செய்வதற்கும் இணையம் வழிவகை செய்துள்ளது. முன்னர் புனிதமாக கருதிய விஷயங்கள் இப்போது அப்படி இல்லை. இரகசியங்கள் இனி இரகசியங்கள் இல்லை.

ஆரம்பத்தில் நாம் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது, அது பொதுவாக வேடிக்கை, பொழுதுபோக்கு மற்றும் தகவலுக்காக மட்டுமே. ஆனால் இப்போது இணையத்தை தவறாக பயன்படுத்தும்போது அது ஒரு நோயாக மாறிவிட்டது. குறிப்பாக, சமூக வலைதளங்கள், ஆபாச தளங்கள், கேமிங் தளங்கள் ஆகியவற்றிற்கு அடிமையாகி இருக்கும் பதின் பருவத்தினரும், இளம் வயதினரும் பெரும்பாலும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இணையத்திற்கு அடிமையாவதால் உண்டாகும் மன இறுக்கத்தின் சில முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:

  • நிஜ உலகத் தொடர்புகளில் இருந்து விலகுவார்கள்
  • உள்நோக்கமுள்ளவர்களாக இருப்பார்கள்
  • பிறருடன் பேசுவது பழகுவதில் மாற்றம் இருக்கும்
  • தனிமையை நாடுவார்கள்
  • பணியில் ஆர்வம் இல்லாமல் போவது
  • பள்ளி மற்றும் பணிபுரியும் இடத்தில் சிறப்பாகச் செயல்படாமல் போவது
  • கோபம் அல்லது தற்காப்பு ஆளுமை வளர்ச்சி
  • சமூக வலைதளங்களில் பதிவிட்ட பதிவுகளுக்கு விருப்பங்களும் கருத்துகளும் வந்துள்ளதா என்று எப்போதும் பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.
  • இணையத்தை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிவதைத் தவிர்ப்பதற்காக இரகசியமாக செயல்படுவார்கள்

இணையம் எனும் நச்சுத்தன்மையே நம் எல்லோரிடமும் குற்றவாளி என்று புதிய உயர்வை ஏற்படுத்துயிருக்கிறது. மனநல வல்லுநர்கள், இணையத்திற்கு அடிமையாதல் எனும் பிரச்சனையானது, போதைப்பொருள் உபயோகத்தினால் ஏற்படும் அதே விளைவுகளை ஏற்படுகிறது என்கின்றனர். இணையப் பயன்பாடு, உளவியல் பிரச்சனைகள், மன இறுக்கம், முதலியவற்றிற்கு இடையே ஒரு தெளிவான தொடர்பு இருப்பதை பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

மன இறுக்கம் வயது அதிகமானவர்களுக்கே ஏற்படக்கூடியது என்றாலும், இப்போது மிக அதிக இளைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பெரியவர்கள் மட்டுமல்ல பதின் பருவத்தினரும், குழந்தைகளும் இந்த மனநிலைக்கு இரையாகிவிடுகிறார்கள். இணையம் வருவதற்கு முன்பு, மக்கள் குடும்பத்தோடு வெளியில் சென்று ஒருவருக்கொருவர் பேச நேரம் எடுத்துக்கொள்வார்கள், குழந்தைகள், பதின் பருவத்தினர் பள்ளியில் ஏற்படும் தங்கள் பிரச்சனைகள் குறித்து பெற்றோருடன் மனம்விட்டு பேசுவார்கள். இதனால் ஒவ்வொருவரின் பிரச்சனைகள் குறித்து மற்றவர்கள் அறிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருக்கவும், தேவைப்படும்போது அதற்கு உதவி வழங்கவும் உதவியாக இருந்தது.

மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இணையத்தில் அடிமையாகிவிட்ட காரணத்தால் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர். இவர்களுக்கு சமூகத்தில் தங்களை ஒத்த வயதுள்ளவர்களுடனும் குடும்பத்துடனும் நல்ல உறவுகளை உருவாக்குவதும், தக்கவைத்துக் கொள்வதும் கடினமாக உள்ளது. அவர்களின் சுய அந்தஸ்து என்பது, பெரும்பாலும் இணையத்தில் பிறரிடமிருந்து கிடைக்கும் அங்கீகாரம் மற்றும் பாராட்டுகளைப் பொறுத்தே அமைவதாக மாறிவிட்டது

இந்த நிகழ்வு பற்றிய ஆராய்ச்சி (Research on this phenomenon)
பல்வேறு வயதுப் பிரிவினர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியில், இணையத்தை அதிகளவில் பயன்படுத்துவோருக்கு (மருத்துவ ரீதியாக இன்டர்நெட் அடிக்ஷன் டிஸ்ஆர்டர் – IAD) மன இறுக்கம் ஏற்படும் என்று கண்டறியப்பட்டது. ஆசிய நாடுகளில் உள்ள இளைஞர்கள் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சீனா போன்ற நாடுகளில், இந்த அடிமைத் தனத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் அதன் பக்க விளைவுகளை அகற்றவும், புனர்வாழ்வு முகாம்கள் நடத்தும் அளவிற்கு இந்தப் பிரச்சனை அதிக அளவிலுள்ளது. இந்தப் பிரச்சனையால், பதின்மவயது ஆன் பிள்ளைகளும் இருபது வயது வாக்கில் உள்ள ஆண்களும் அதிகம் மன இறுக்கமடைய வாய்ப்புள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் இது முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா என்பது போல் உள்ளது. மன அழுத்தத்தில் உள்ளவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக பிறருடன் பேச பழக இணையத்தைப் பயன்படுத்துகிறார்களா அல்லது இணையத்தைப் பயன்படுத்துவதால் அவர்களுக்கு மன இறுக்கம் ஏற்படுகிறதா என்று யாருக்கும் இன்னும் துல்லியமாகத் தெரியவில்லை!

மனித குலத்திற்குக் கிடைத்த வரம், மனிதர்களுக்கு கிடைத்த சாபமாகவும் இருக்கலாம் அல்லவா? நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு (குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள்) இது போன்ற பிரச்சனை இருக்கிறதா என்பதைக் கண்டறிவதும், அதிலிருந்து அவர்களை வெளிக்கொண்ட வர அவர்களுக்கு உதவுவதும் மிகவும் முக்கியம், நமது கடமையும் கூட!