தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பொன்னியன் செல்வனாக அற்புதமாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்துவரும் ஜெயம் ரவி இதற்கிடையில் பல திரைப்படங்களையும் கைவசம் வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் இயக்குனர் அகமத் இயக்கத்தில் உருவாகி வரும் “இறைவன்” திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வரும் இப்படம் விரைவில் முடிவடைந்து திரைக்கு வர இருக்கும் நிலையில் இப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
#IRAIVAN Movie Stills 🔥#JayamRavi | #Nayanthara | #Ahmed pic.twitter.com/2mK7CP9TBP
— Saloon Kada Shanmugam (@saloon_kada) January 26, 2023