‘ஒத்த செருப்பு’ படத்திற்கு பிறகு நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் தான் “இரவின் நிழல்”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை புதிய முயற்சியாக 94 நிமிடம் 36 நொடிகளில் ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ளனர். குறிப்பாக உலகிலேயே Non Linear முறையில் படமாக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படமாக இப்படம் உருவாகியிருந்தது.
இதனால் அதிக ஆர்வத்தோடு இருந்த ரசிகர்களுக்கு இப்படம் பெரும் விருந்தாக அமைந்திருந்தது. இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி பல விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது. அண்மையில் இப்படம் அமேசான் பிரைம் தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ (9.12.22) இன்று இரவு 9 மணிக்கு வெளியாக உள்ளது. சிங்கிள் ஷாட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் மேக்கிங்கில் இருந்த சவால்களை இன்று நடிகர் பார்த்திபன் தனது youtube சேனல் பக்கத்தில் வெளியிட இருக்கிறார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதில் தற்போது இப்படத்தை பாராட்டி நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவையும் பகிர்ந்து தனது நன்றியையும் தெரிவித்து இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
தலை வணங்கியவரின்
தாள் வணங்குகிறேன்!https://t.co/3TI8Z6eqY6வித்தையின் வீரியம் அறிந்தவர்களின்
பாராட்டு பெருமை/பெருமிதம்!
முதல் சாதனையெனும்
சிகரம் அடைதலின்
சிரமம் அறிந்ததால்
சிரம் மேல் உயர்த்துகிறார்கள்!முதலில் படத்தை அமேசானில் வெளியிட்டுவிட்டு
Making https://t.co/E07Yoi0PPc— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 9, 2022