Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகை கீர்த்தி சுரேஷுடன் அனிருத் காதலா?

Is Anirudh in love with actress Keerthi Suresh

நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.

தெலுங்கில், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். மேலும் 2 தெலுங்கு படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேசும், இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. 3 மாதங்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடிய அனிருத்துக்கு, நடிகை கீர்த்தி சுரேஷ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்ததுடன் அவருடன் நெருக்கமாக இருக்கும் 2 புகைப்படங்களையும் பகிர்ந்தார்.

தற்போது அந்த புகைப்படங்களை வலைத்தளத்தில் வைரலாக்கி, இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரப்பி வருகிறார்கள். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் பேசுகிறார்கள். ஆனால், இதனை கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.

இருவரும் நண்பர்கள்தான். காதல் இல்லை என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மறுத்தார்கள். ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியாவை அனிருத் முத்தமிடும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.