Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

டிரெண்டாகும் அட்லீ…. மீண்டும் இணைகிறதா மெர்சல் கூட்டணி?

Is the Mersal Alliance reuniting

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் விஜய் நடிக்கும் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே விஜய்யின் 66-வது படத்தை இயக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தளபதி 66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்திருந்தது.

இதனிடையே தளபதி 66 படத்தை இயக்க இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ இடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகர் விஜய், அட்லீயுடன் இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களை அட்லீ கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.