நீரிழிவு நோயாளிகள் இளநீரை குடிப்பது நல்லதா என்று பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும் நோயாக நீரிழிவு நோய் இருக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவுகளில் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். எப்படி இருக்கும்போது இளநீரில் கொஞ்சம் இனிப்பு சுவை இருப்பதால் குடிக்கலாமா வேண்டாமா என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் இருக்கும்.
இளநீரில் இருக்கும் பல ஆரோக்கியமான சத்துக்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் இளநீரை குடிப்பது சிறந்ததாகவே சொல்லப்படுகிறது.
ஏனெனில் இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இளநீரில் இருக்கும் மெக்னீசியம் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது.
இளநீர் மட்டுமில்லாமல் அதில் உள்ள வழுக்கையும் சாப்பிடலாம். இது கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்தி இதய நோயாளிகளுக்கு சிறந்ததாக இருக்கிறது.